ஆன்மிக துளிகள்

காமதேனுவே போற்றி!

``ஸ்ரீராகவேந்திர ஸ்வாமியை வணங்கும்போது, `பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே' என்று சொல்கிறோம். கல்பவிருக்ஷம் என்றாலே, `அனைத்தையும் தருபவர்' என்றுதானே அர்த்தம். அப்படியிருக்க, காமதேனுவே என்றும் ஏன் அவரை அழைக்கிறோம்?" என பக்தர் ஒருவர் கேட்டார்.

அவருக்கு ஆன்மிகப் பெரியவர் ஒருவர் பதில் சொன்னார்: ``கல்பவிருக்ஷம், நாம் அதனிடம் சென்று கேட்டால்தான் தரும். ஆனால் காமதேனு என்ற தெய்வப் பசுவோ நாம் இருக்கும் இடத்துக்கே வந்து அருள்புரியும்; அள்ளி அள்ளித் தரும். ஸ்ரீராகவேந்திரரும் அப்படித்தான்! மந்த்ராலயத்துக்குச் சென்று கேட்டால்தான் உண்டு என்றில்லை; அந்த மகாபிரபு, சர்வலோக சஞ்சாரியாக - நாம் இருக்கும் இடத்திலே, நினைக்கும் இடத்திலேயே எழுந்தருளி, வரங்களை வாரி வழங்குவார்!''

- பத்மஜா, ஸ்ரீரங்கம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick