பதினாறும் தருவாள் அலைமகள்

வராத்திரி வைபவத்தில் ஆதிபராசக்தியை முப்பெருந்தேவியாராகவும், `பாலா’ முதலான ஒன்பது திருவடிவங்களாகவும் வழிபடுவது வழக்கம். அதேபோல், லட்சுமிதேவியின் 16 திருவடிவங்களைத் தியானித்து வழிபடுவதும் சிறப்பு. இதனால், நம் இல்லத்தில் நிரந்தரமாகத் தங்கியிருந்து, பதினாறு செல்வங்களும் செழித்தோங்க அருள்புரிவாள் அலைமகள்.

ஸ்ரீதனலட்சுமி : கருணையோடு நேர்மையாக வாழ்பவர்களை இத்தேவி அனுக்கிரகிப்பாள்.

ஸ்ரீவித்யா லட்சுமி : இனிமையாகப் பேசி, மற்றவரின் மனம் குளிர நடப்பவர்கள், இந்த அன்னையின் அருளைப் பெறலாம்.

ஸ்ரீதான்ய லட்சுமி: பசித்தவருக்கு உணவளிக்கும் அன்பர்கள், தான்யலட்சுமியின் ஆசியைப் பெறுவார்கள்.

ஸ்ரீவரலட்சுமி :  பாவங்கள் செய்யாமல் அறவழியில் வாழும் அன்பர்களுக்கு வரலட்சுமியின் திருவருள் கைகூடும்.

ஸ்ரீசௌபாக்கிய லட்சுமி : மற்றவர்கள் மகிழ்ச்சிக்கு காரணமாகும் அனைவருக்கும் இந்த அன்னை வரம் வாரி அருள்வாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick