ராசிபலன்

அக்டோபர் 9 முதல் 22 வரை

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஃப்ரிட்ஜ், டி.வி, வாகனம் ஆகியவற்றைப் புதிதாக வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு கள் மறையும். தெளிவாக முடிவெடுப்பீர்கள்.

கணவன்-மனைவி இருவரும்  ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். பிள்ளைகளின் வருங் காலம் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். 16-ம் தேதி வரை சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால் மதிப்பு உயரும். சிலர், உங்கள் உதவியை நாடுவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தாயாரின் உடல்நலம் சீராகும். ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 10 - ம் வீட்டில் அமர்ந்துள்ளதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். 

வியாபாரத்தில், நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில், உங்களை நம்பி  மிக முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப் படும். கலைஞர்களுக்கு, எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும்.

புதிய பாதையில் பயணிக்கும் தருணம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

குரு பகவான் வலுவாக இருப்பதால், பிள்ளை களால் பெருமை அடைவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். சவாலான விஷயங் களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கடன் கட்டுக்குள் வரும்.

புதனும் சுக்கிரனும் 6-ம் வீட்டில் நிற்பதால் தொண்டைவலி, சளித் தொந்தரவு, ரத்த அழுத்தம், வாகனச் செலவுகள் வரக்கூடும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் பகை, நண்பர்களுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால், வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

16-ம் தேதி வரை 5-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். ஆனால், 17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால், திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசு வகையில் அனுகூலம் கிடைக்கும்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூல் ஆகும். பங்குதாரர்கள் உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பார் கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார். கலைஞர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

மனம் தளராமல் போராடவேண்டிய வேளை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்