செவ்வாய் தோஷம் - காரணங்களும் பரிகாரங்களும்! | Problems and remedies for chevvai dosham - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)

செவ்வாய் தோஷம் - காரணங்களும் பரிகாரங்களும்!

‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி

திருமணத்துக்குப் பொருத்தம் பார்க்கும்போது, பத்துப் பொருத்தங்களுடன், வேறு ஏதேனும் தோஷங்கள் இருக்கின்றனவா என்றும் பார்ப்பது வழக்கம். குறிப்பாகச் செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருந்தால், அவர்களது திருமணமே கேள்விக் குறியாகிவிடுகிறது. செவ்வாய் தோஷம் பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும், செவ்வாய் தோஷத்துக்குக் கூறப்பட்டுள்ள விதிவிலக்குகள் பற்றியும் பார்ப்போம்.

`வினைப்பயனே தோஷங்களுக்குக் காரணம்’ என்பார்கள் பெரியோர்கள். அவ்வகையில், மற்றவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பது, சகோதரர்களுக்குத் துரோகம் செய்வது, சுயநலத்துக்காக இயற்கை வளங்களைச் சுரண்டுவது போன்ற காரணங்களால் ஒருவருக்குச் செவ்வாய் தோஷம் ஏற்படும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close