புது வீடு... வாஸ்து ரகசியங்கள்!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் - அட்டையிலும் இங்கும் ஓவியம் : சந்தான கிருஷ்ணன்

ம் உடலுக்கு எந்தக் கேடும் வராமல் நூறு வயதுக்கு மேலும் நல்லபடியாக வாழவேண்டும் என்று விரும்புகிறோம். ஆரோக்கியம் சிறக்கவும் ஐஸ்வரியம் மேலோங்கவும் அயராமல் பாடுபடுகிறோம். அதேபோல், நாம் நிரந்தரமாக வசிக்க விரும்பும் வீடும் ஸ்திரமானதாகவும் அங்கே நாம் வாழும் வாழ்க்கை சுபிட்சமாகவும் இருக்க, வாஸ்து சாஸ்திரத்தின்படி முறைதவறாமல் நமது வீட்டை அமைத்துக்கொள்ள வேண்டும்.

நிலையான ஒரு வாழ்க்கைக்கு வீட்டின் அமைதியான பங்கும் அவசியம். ஓர் இடத்தை அதாவது காலி இடத்தை விலைக்கு வாங்குவதற்கு வாஸ்துவின் பங்கு பெருமளவில் தேவையில்லை. அதேநேரம், அந்த இடத்தில் நாம் என்ன கட்டப்போகிறோம் என்பதைப் பொறுத்து வாஸ்துவுக்கான பரிகாரங்கள் மாறுபடும். அங்கே கட்டடம் கட்டத் துவங்குவதற்குமுன், முதல் செங்கலை எடுத்துவைக்கும்போதே நாள், நட்சத்திரம், கிரகநிலை போன்ற அனைத்தையும் பார்த்து ஆரம்பிக்கவேண்டும். இந்த நிகழ்வை ‘ஆதான லக்னம்’ என்கிறது சாஸ்திரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!