நிலப் பிரச்னைகள் தீரும் நிம்மதி பிறக்கும்! - மேல்பொதட்டூர் தரணி வராகர் தரிசனம் | Worship for land problems getting solution - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)

நிலப் பிரச்னைகள் தீரும் நிம்மதி பிறக்கும்! - மேல்பொதட்டூர் தரணி வராகர் தரிசனம்

றைவனின் அவதாரங்களில் வராக அவதாரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. மற்ற அவதாரங்கள், பூமியில் தர்மத்தை மீட்டெடுக்க நிகழ்ந்தவை எனில், வராக அவதாரமோ பூமியையே மீட்டெடுக்க நிகழ்ந்தது!

இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டெடுத்த வராகப் பெருமானிடம் அளப்பரிய பக்தி கொண்டிருந்தார் சாளுக்கிய மன்னர் இரண்டாம் நரசிம்மராயர். அவரது  பக்தியை முன்னிட்டு வராகப் பெருமான் நிகழ்த்திய லீலையின் பலனாக, நாம் இந்த பூவுலகில் தரிசித்து வழிபட ஓர் அற்புதத் தலம் ஏற்பட்டது.

அதுதான், திருத்தணிக்கு அருகில் அமைந்திருக்கும் மேல்பொதட்டூர் பேட்டை எனும் திருத்தலம். இங்கே, அருள்மிகு பூமிதேவி சமேதராக திருக்கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு தரணி வராக சுவாமி.

[X] Close

[X] Close