அன்னை தந்த பிள்ளை வரம்!

தாய்மை அடையும் போதுதான் ஒரு பெண் முழுமையடைகிறாள் என்பார்கள். திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன பிறகும் நான் தாய்மைப் பேற்றை அடையாமல் பட்ட அவஸ்தைகள், எழுத்தில் வடிக்க முடியாதவை.

என் புகுந்த வீடு எனக்கு ஆதரவாக இருந்தபோதும், சொல்ல முடியாத துன்பத்தில் ஒவ்வொரு நாளும் கலங்கி வந்தேன். போகாத மருத்துவமனைகள் இல்லை. லட்ச லட்சமாகச் செலவு செய்தும் பலனேதுமில்லை.  ஆண்டுகள் செல்ல செல்ல, `இனி குழந்தைப்  பாக்கியமே எனக்கு  இல்லையோ' என்ற பயம் வர ஆரம்பித்தது.

சுற்றியுள்ளவர்கள், ஆளாளுக்கு அறிவுரை சொன்னார்கள். எதுவும் பலனளிக்காத நிலை.

ஒரு கட்டத்தில், ‘எனக்கு ஒரு மழலை மட்டும் கிடைத் தால் போதும்; அதன் பிறகு என் உயிரைக்கூட எடுத்துக் கொள்ளுங்கள்' என்று எல்லா கடவுள்களிடமும்  வேண்டிக் கொள்ள ஆரம்பித்தேன்.  

என் கணவரோ, `‘விட்டுவிடு சிவகாமி, குழந்தை பாக்கியம் நமக்கு இல்லை என்பது விதியானால், அப்படியே இருந்துவிடுவோம்'’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!