உழவாரப் பணி செய்வோம்! - 2 - அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் குரங்கணில் முட்டம்

குரங்கு (வாலி), அணில் (இந்திரன்), முட்டம் என்ற காக (யமன்) வடிவில் மூவரும் வந்து வழிபட்ட தலம் என்பதால் இந்த ஊருக்குப் பெயரே குரங்கணில் முட்டம் என்றானது. ‘இறையார் வளையம்மை’ உடனுறை ‘வாலீஸ்வரர்’ என்ற ‘கொய்யாமலை நாதர்’ அருளும் இந்த தலத்தில் வழிபடுவோருக்கு பிறப்பிலா பேரின்ப நிலை உண்டாகும் என்கிறார் திருஞான சம்பந்தர். இந்தத் திருக்கோயிலின் உழவாரத் திருப்பணியில் கலந்து கொண்டால், இம்மையில் இன்பம் பெற்று, மறுமையிலும் அமைதி பெற்று வாழ்வார்கள் என்பது ஆன்றோர்கள் வாக்கு. வாருங்கள் இறையருள் அனுபவம் பெறுவோம்.

இடம் : குரங்கணில் முட்டம் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்.

நாள் : 14-10-18 ஞாயிறு. (காலை 10 முதல் மாலை 5 மணி வரை)

வழி : காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி பாதையில் சுமார் 5 கி.மீ தொலைவில் தூசி என்றொரு கிராமம் வரும், அங்கிருந்து குரங்கணில் முட்டம் ஊருக்குப் பிரியும் பாதையில் 2 கி.மீ  சென்றால், உட்புறமாக அமைந்துள்ளது கோயில். உழவாரப் பணியில் இணைய விரும்பும் வாசகர்கள் கீழ்க்காணும் எண்ணுக்கு குறுந்தகவல் (வாட்ஸ் அப்) அனுப்பி முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு: 89390 30246

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்