புதுத் தொழிலுக்கு உகந்த காலம்... | Astrology Benefits for Business - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)

புதுத் தொழிலுக்கு உகந்த காலம்...

கோசாரப்படி குருபலம் உள்ள காலங்களில் அதாவது ராசிக்கு 2, 5, 7, 9, 11-ம் இடங்களில் குரு உலவும்போது, தொழில் தொடங்குவது நல்லது. தொழில் தொடங்குபவரின் நட்சத்திரத் துக்கு, தொழில் தொடங்கும் நாளின் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9-ஆக அமைவது விசேஷமாகும்.

அமிர்த யோகம் உள்ள நாள் விசேஷம். அடுத்தபடியாக சித்தயோகம். மரணயோகமும், பிரபாலாரிஷ்ட யோகமும் நிச்சயம் விலக்கப்பட வேண்டும். தொழில் தொடங்கும் நாள் சுப முகூர்த்த நாளாக அமைவது சிறப்பு. தொழில் ஸ்தானமும் தொழில் ஸ்தானாதிபதியும் பலமாக உள்ள லக்னத்தைத் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட லக்னம் அமையும் பஞ்சக சுத்தம் உள்ள (திதி, வார, நட்சத்திரம், லக்னம், துருவம்) நேரத்தில் தொழில் ஆரம்பிப்பது நல்லது.

- ராம்திலக், மடிப்பாக்கம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close