திருவருள் செல்வர்கள்! - 13 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர் (தொடர்ச்சி)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சின்னபொம்ம அரசர், தஞ்சை அரசர், அப்பய்ய தீட்சிதர், மற்றுமொரு வித்வான் ஆகிய நால்வரும் ஆலய தரிசனத்துக்குச் சென்றார்கள். அங்கே, மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்தபடி திகழும் சாஸ்தா விக்கிரகம் குறித்து விளக்கம் கேட்டார்கள்.

“மகான் ஒருவர் வந்து இந்த விக்கிரகத்தின் ரகசியத்தைப் புலப்படுத்துவார். அப்போது, ஆள்காட்டி விரலை மூக்கிலிருந்து சாஸ்தா எடுத்துவிடுவார்” என்று காரணம் கூறப்பட்டது. அரசர்கள், ஸ்ரீதீட்சிரையும் வித்வானையும் நோக்கி, “அந்த ரகசியத்தை வெளிப்படுத்த முடியுமா?’’ எனக் கேட்டார்கள். வித்வான் முந்திக்கொண்டு பதில் சொன்னார்.

“தாம் மகாவிஷ்ணுவுக்குப் பிள்ளையாக, பிரம்மாவுக்குச் சமமானவராக இருந்தும், சிவனுடைய பூதகணங்களுடன் சேர்ந்திருக்கவேண்டியதாக உள்ளதே என்று சிந்திக்கிறது” என்றார். ஊஹூம்! விக்கிரகத்தின் விரல் அப்படியேதான் இருந்தது. அனைவரும் ஸ்ரீதீட்சிதரிடம் விளக்கம் சொல்லும்படி வேண்டினார்கள்.

“ `நான் கயிலாயம் சென்றால் பார்வதியை அம்மா என்று அழைப்பேன். ஆனால், மோகினி வடிவம் எடுத்த என் தாயான மகாவிஷ்ணுவின் மனைவி லட்சுமிதேவியை என்னவென்று சொல்லி அழைப்பது' என்று சிந்திக்கிறது” என விளக்கம் சொன்னார் ஸ்ரீதீட்சிதர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!