மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே... | Tirumeeyachur Mehanadhar Temple in Tiruvarur - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே...

திருக்கோயில், இளங்கோயில் என்று இரண்டு கோயில்கள் ஒரே தலத்தில் அமைந்த தலம் திருமீயச்சூர். திருவாரூர்  மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். இந்தக் கோயிலின் நிர்வாகம் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

பிரம்மா, சரஸ்வதி, மகாவிஷ்ணு, மகாலட்சுமி, அருணன், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம். மட்டுமின்றி, தட்சிண கங்கை காவிரியும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பூஜித்து பேறு பெற்ற தலம் இது. மேலும் கருடன், அருணன், வாலி, சுக்ரீவன், யமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்த தலம் என்று சொல்லப்படுகிறது.

சூரியன் சாபவிமோசனம் வேண்டி இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை கஜவாகனாரூட ராக வழிபட்டு புத்திரப் பேறு பெற்ற தலம்.

திருக்கோயிலில் இறைவன் மேகநாத சுவாமி என்ற திருப் பெயரிலும், இளங்கோயிலில்  இறைவன் சகலபுவனேஸ்வரர் என்ற திருப்பெயரிலும் காட்சி தருகின்றனர். மேகநாத சுவாமியை திருஞானசம்பந்தரும், இளங்கோயில் இறைவனை அப்பர் பெருமானும் பாடியுள்ளனர். திருக்கோயில் இறைவி அருள்மிகு லலிதாம்பிகை; இளங்கோயில் இறைவி அருள்மிகு மேகலாம்பிகை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close