குலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்! | Dasara festival in kulasekarapattinam - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)

குலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்!

சரா என்றால், பத்தாவது ராத்திரி என்று பொருள். `தசரா' கொண்டாட்டம் என்றாலே, மைசூரில் நடைபெறும் தசரா விழாதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், தமிழகத்திலும் தசரா பண்டிகை கொண்டாடப்படும் திருத் தலம் குலசேகரப்பட்டினம்.

மைசூரில் நடைபெறும் விழா, தர்பார் விழா என்றால், நம் குலசேகரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா விழாவானது தவக்கோலம் கொண்டு, விரதம் அனுஷ்டித்துக் கொண்டாடப் படும் பக்திப் பெருவிழா!

பாண்டியரின் தலைநகராக திருநெல்வேலி இருந்த காலத்தில், மன்னர் குலசேகர பாண்டியனின் கனவில் குலசை முத்தாரம்மன் காட்சி அளித்ததாகவும், அதன் காரணமாக இந்த ஊர் ‘குலசேகரன் பட்டினம்’ என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

ருமுறை குலசேகரபாண்டியன் இந்த ஊரில் தங்க நேர்ந்தபோது, ஊரின் தென்பாகத்தில் ஒரு விநாயகர் கோயிலைக் கட்டினார். அந்த விநாயகரின் பெயர் ‘மும்முடி காத்த விநாயகர்’. சேர, சோழ மன்னர்களும் வெவ்வேறு காலங்களில் இந்த ஊரை தங்கள் வசப்படுத்தியதாகத் தெரியவருகிறது. அதனால்தான் இவருக்கு ‘மும்முடி காத்த விநாயகர்’ என்று பெயர் ஏற்பட்டது என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது!

முன்னொரு யுகத்தில் இந்தப் பகுதியில் வரமுனி என்பவர் வசித்தார். ஒருமுறை அகத்தியர் இந்த வழியாக வந்தபோது, வரமுனிவர் அவரைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதால், சாபம் பெற்றார். அதன் விளைவாக மகிஷாசுரனாக மாறி, மற்ற முனிவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தார். அன்னை சக்தி தோன்றி மகிஷனை சம்ஹாரம் செய்தாள்.

[X] Close

[X] Close