ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்! - சிறப்புப் போட்டி | Lord Ganesha Deepam Competition - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்! - சிறப்புப் போட்டி

30 பேருக்கு தலா ரூ 750 மதிப்பிலான சிறப்புப் பரிசுகள்!

அன்பார்ந்த வாசகர்களே!

வழிபாடுகளில் முதன்மையானது ஒளி வழிபாடு. தெய்வங்களில் முதன்மையானவர் பிள்ளையார். ஆக, பிள்ளையாரை தீபங்களால் ஆராதிப்பது சிறப்பு அல்லவா? நாமும், வரும் விநாயகர் சதுர்த்தியில், தீபங்கள் ஒளிர கொண்டாடுவோம் விநாயகரை!

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

உங்கள் கலைத்திறனுக்கேற்ப அற்புதச் சிலையாக, அழகு ஓவியமாக உருவாக்குங்கள் ஒரு பிள்ளையாரை. நீங்கள் செய்த பிள்ளையார் சிலை அல்லது ஓவியத்தை மையமாக அமர்த்தி, சுற்றிலும் தீபங்கள் ஏற்றுங்கள்.

தீபங்கள் ஒளிரத் திகழும் உங்கள் பிள்ளையாரை புகைப்படம் எடுத்து அனுப்புவதோடு, அந்தப் பிள்ளையா ருடனான உங்களின் `செல்ஃபி' புகைப்படம் ஒன்றை யும் கீழ்க்காணும் முகவரிக்கு தபாலிலோ, இ.மெயில் மூலமாகவோ அனுப்பிவையுங்கள் (உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் அவசியம்).

புகைப்படங்களோடு, தீப ஒளி சூழத் திகழும் உங்கள் பிள்ளையார் உருவான விதத்தையும் உங்களின் அனுபவத்தையும் சுருக்கமாக எழுதியனுப்புங்கள். தேர்வு செய்யப்படும் சிறந்த 30 பிள்ளையார் படைப்புகள், சக்தி விகடனின் தனி இணைப்பிதழில் வெளியிடப்படும்.

வெற்றிபெறும் வாசகர்களுக்கு (30 பேருக்கு) தீபம் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான காளீஸ்வரி ரீஃபைனரி வழங்கும் ரூ.750 மதிப்புள்ள பரிசுகள் காத்திருக்கின்றன. வெற்றியாளர்களைத் தேர்வு செய்வதில், ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

புகைப்படங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள்: 5.9.18

முகவரி: `ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!’ சிறப்புப் போட்டி, சக்தி விகடன், 757 அண்ணாசாலை, சென்னை- 600 002. e.mail: sakthi@vikatan.com

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick