மகத்தான வாழ்வு தரும் மாணிக்க விநாயகர்!

இலங்கையில் கணபதி தரிசனம்!

சிவபூமி எனப் போற்றப்படும் இலங்கையில்,   இந்தியத் திருக்கோயில்களுக்குச் சற்றும் சளைக் காத பழம்பெரும் கோயில்கள் பல உண்டு. அவை தவிர, சமீப காலங்களில் எழுப்பப்பட்ட  கோயில் களும் நிறைந்துள்ளன.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வந்த போர்ச்சுகீசியர்கள், அங்கே பல கோயில்களை இடித்து, அரிய பொக்கிஷங்களைக் கொள்ளையடித் தனர். பிற்காலத்தில், இந்த ஆலயங்களில் பல யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் முயற்சியால் கண்டறியப்பட்டு, ஆன்மிகப் பெரியவர்களின் உதவியுடன் புனரமைக்கப்பட்டன.

பின்னர் 1983-ல் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதும் பல ஆலயங்கள் இடிக்கப் பட்டன. அப்படி இடிக்கப்பட்ட ஆலயங்களும் அரசின் நிதியுதவி மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் களின் உதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றன.

இங்ஙனம், பல இடையூறுகள் ஏற்பட்ட காலங் களில்கூட, இன்னல்களைச் சந்திக்காமல் கம்பீர மாகவும் இலங்கையின் கௌரவச் சின்னமாகவும் விளங்குகிறது அருள்மிகு மாணிக்க விநாயகர் கோயில். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அந்த ஆலயத்தை தரிசிப்போமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick