ஆலயம் தேடுவோம்: திருப்பணிக்குக் காத்திருக்கும் ‘காசி கணபதி’ ஆலயம்

காசிக்குச் செல்பவர்கள் அங்கே அவசியம் தரிசிக்கவேண்டிய கோயில் காசி துண்டீர கணபதி திருக்கோயில். அந்தக் காலத்தில் எல்லோராலும் எளிதில் காசிக்குச் சென்றுவிடமுடியாது. காசி தலத்துக்குச் செல்ல முடியாதவர்கள் மட்டுமல்ல, காசியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களும், இங்கே தென்னகத்தில் காசி துண்டீர கணபதியை வழிபட வேண்டும் என்று விரும்பினார் காசியார் எனும் சித்தபுருஷர்.

அவரால் சுமார் 250 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கோயில்தான் காசியார்மடம் காசி கணேசர் கோயில். கோயிலை ஒட்டியே அன்னதான மண்டபம் ஒன்றும் ஏற்படுத்தினார். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த விநாயகரை  வழிபட்டு, அன்னதான மண்டபத்தில் பசியாறி, ஓய்வெடுத்துச் சென்றனர். தொடர்ந்து 180 வருடங்களுக்கும் மேலாக,

இக்கோயிலில் நித்திய பூஜைகளும் அன்னதானமும் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தன. ஆனால், காலப்போக்கில் கோயில் சிதிலமடைந்துவிட்டதுடன், அன்னதானமும் தடைப்பட்டது. தற்போது, அந்த ஆலயத்தையும் அன்னதான மண்டபத்தையும் புதுப்பிக்க காசி கணேசர் திருவுள்ளம் கொண்டுவிட்டார் போலும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick