ராசிபலன் | Astrological predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்

ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்


சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். அரசு வகையில் லாபம் கிடைக்கும். தொட்ட காரியம் துலங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனடியாக முடியும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

ஆகஸ்ட் 30 - ம் தேதி வரை சுக்கிரன் 6 - ம் வீட்டில் மறைவதால், கணவன்- மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதன் பிறகு 7 - ம் வீட்டில் ஆட்சி பெற்று, குருவுடன் சேர்ந்து அமர்வதால், கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் வரும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கைக் கேட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தேவையற்ற வீண்வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

சகிப்புத்தன்மையால் சங்கடங்கள் தீரும் தருணம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

புதனும், சூரியனும் வலுவாக நிற்பதால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி-கள் உதவிக்கு வருவார்கள். வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பான வேலைகள் சாதகமாகும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகள் உங்களின்  மன ஓட்டத்துக்கு ஏற்ப நடந்துகொள்வார்கள்.

அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் விரைவில் முடியும். சிலருக்கு வீடு மாறவேண்டிய அவசியம் ஏற்படக்கூடும். திடீர் யோகம் உண்டாகும். பல வழிகளில் பணம் வந்து சேரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். ஆகஸ்ட் 31 - ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6 - ம் வீட்டில் குருவுடன் சேர்ந்து மறைவதால் தொண்டைப் புகைச்சல், சளி, காய்ச்சல், சிறுசிறு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள்; போட்டிகளைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

விடாமுயற்சியால் இலக்கை எட்டும் வேளை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick