ராசிபலன்

செப்டம்பர் 11 முதல் 24-ம் தேதி வரை

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

சுக்கிரனும் குருவும் உங்களின் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்கியம், தைரியம் கூடும். பணப் பற்றாக்குறையைச் சாமர்த்தி யமாகச் சமாளிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். நல்ல செய்திகள் வந்துசேரும்.

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 16-ம் தேதி வரை ஆட்சி பெற்று நிற்பதால், பிரச்னைகளை எதிர் கொள்ளும் தைரியம் பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் விலகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். 17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால், திடீர் திருப்பம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு.

14-ம் தேதி வரை புதன் 5-ம் வீட்டில் தொடர்வதால், பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவர். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால், சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். கலைத்துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் நேரம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

புதனும், சூரியனும் வலு அடைந் திருப்பதால், அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டட வரைபடமும் அப்ரூவலாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

6-ம் வீட்டில் சுக்கிரனும், குருவும் மறைந்திருப்பதால் கணவன், மனைவிக்குள் பனிப்போர் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அஷ்டமத்துச் சனியும் தொடர்வதால், எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.  வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத் துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

நிதானம் தேவைப்படும் காலம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick