உழவாரப் பணி செய்வோம்! - இலம்பையங்கோட்டூர்

தழ்ப் பணியில் மட்டுமின்றி இறைப்பணிகளிலும் உங்கள் சக்தி விகடன் முனைப்புடன் பணியாற்றி வருவதை அறிவீர்கள்.திருவிளக்கு பூஜை,  சுவாஸினி பூஜை, வேல்மாறல் பாராயணம் வழிபாடு, ஆலயம் தேடுவோம், பிரசித்தி பெற்ற கோயில்கள் தீப மேடை சமர்ப்பணம்... எனத்  தொடரும் சக்திவிகடனின் இறைப்பணியில், அடுத்த முன்னெடுப்பு- திருக்கோயில்களில் உழவாரத் திருப்பணி.

எப்போதும்போல் உங்களின் பேராதரவு மற்றும் ஒத்துழைப்போடு இந்தப் புண்ணிய திருப்பணியில் இடம்பெறவுள்ள முதல் திருத்தலம் - இலம்பையங்கோட்டூர் - அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் தொண்டை நாட்டுத் தலங்களுள் மேன்மையானது என்றும் மறைந்த காஞ்சி மகா பெரியவரின் மனம் கவர்ந்த கோயில் என்றும் போற்றப்படும் திருத்தலம் இது. நாடி வந்து வணங்குபவர்களுக்கு அழகும் இளமையும் ஈசன் அருளும் க்ஷேத்திரம் இது.

ஆம், தெய்வலோக மங்கையர்களான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர், தாங்கள் பெற்ற சாபத்தை, இங்கு வந்து வழிபட்டு நிவர்த்தி செய்துகொண்டதாகவும் தங்களின் இளமையையும் பொலிவையும் மீண்டும் பெற்றதாகவும் சொல்கிறது தலவரலாறு. அதனால் அரம்பையங் கோட்டூர் என்றாகி, பின்னர் இலம்பையங்கோட்டூர் எனப் பெயர் மருவிய தாம் இந்தத் தலத்துக்கு. சந்திரன் வழிபட்டு பேறுபெற்றதால் இது சந்திரனுக்கான பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick