ஆன்மிக துளிகள்

வேற்றுமையில் ஒற்றுமை!

ஸ்ரீஅன்னை ஒருமுறை ஜப்பான் சென்றார். அங்கே அவரைச் சந்திக்க வந்த அன்பர் ஒருவர் தனது கருத்தை அன்னையிடம் பகிர்ந்துகொண்டார்.

‘`அன்னையே! உலகம் முழுவதும் சகோதரர் களாக அன்போடு வாழ, சுலபமான இரண்டு வழிகள் இருக்கின்றன. உலகில் எல்லா ஆண்களுக்கும் ஒருவித மாகவும், எல்லாப் பெண்களுக்கும் இன்னொருவிதமாகவும் சீருடையைத் தோற்றுவித்துவிடுங்கள். உலக மக்கள் அனைவரும் ஆங்கில மொழியைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று கட்டளை இடுங்கள். உடையும் மொழியும் ஒன்றானால், பேதங்கள் அகன்று, ஒற்றுமை தோன்றிவிடும்’’ என்றார் அவர்.

அதைக் கேட்ட அன்னை கலகலவென நகைத்தார். ‘அப்படிப் பட்ட ஒற்றுமை அல்ல கடவுளின் விருப்பம்’ என விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick