மண்... மக்கள்... தெய்வங்கள்! - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

லைச்சுவடிகளாக, செவிவழிப் பாடல்களாக, அச்சிதழ்களாக வெவ்வேறு வடிவங்களில் ஒளிந் திருக்கின்றன நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிய கதைப்பாடல்கள். தொன்ம வாழ்க்கைக்குச் சான்றாகவும் திகழும் இந்தக் கதைப்பாடல்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க அரசுகளோ, கல்விக் கூடங்களோ முனைவதில்லை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற வெகுசில நிறுவனங்களே இப்படியான கதைகளை நூல்களாக ஆவணப்படுத்துகின்றன.

தமிழகத்தில் உத்தேசமாக, ஐந்து லட்சம் ஓலைச் சுவடிகள் இருக்கக்கூடும்  என்கிறார்கள் ஆய்வாளர் கள். பெரும்பாலானவை தனி நபர்களிடம்தான் இருக்கின்றன. இவற்றில் பல அரிய சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளும் அடக்கம். யாரிடம் ஓலைச் சுவடிகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, சொற்பப் பணம் கொடுத்து வாங்கி வெளிநாட்டுக் குக் கொண்டுபோகும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிறைந்து திகழும் இந்தக் கதைப் பாடல்கள், கோயில் கொடை விழாக்களில் வில்லிசையோடு சேர்ந்து ஒலித்துக்கொண்டிருக் கின்றன. சுமார் 184 கதைப்பாடல்கள் வில்லிசைக் கலைஞர்களால் இசையோடு ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick