‘திரைத்துறையில் பிரகாசிக்க பரிகார மந்திரங்கள் உண்டா?’ | Spiritual Question and Answer - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

‘திரைத்துறையில் பிரகாசிக்க பரிகார மந்திரங்கள் உண்டா?’

? என் மகளுக்கு வெகுநாள்களாகத் திருமணம் தடைப்பட்டு வருகிறது. எப்போது திருமணம் நடைபெறும்?

- அ.சண்முகம், மோர்ப்பாளையம்.

தங்கள் மகளின் பிறந்த லக்னம் ரிஷபம் அல்ல; கடக லக்னம் என்பதே சரி. தங்கள் மகளின் ஜாதகம் சுத்த ஜாதகம். ஒரு சுத்த ஜாதகத்தை எப்படி நிர்ணயிப்பது என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றிலிருந்து 7, 8 ஆகிய வீடுகளில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இருப்பது தோஷத்தை ஏற்படுத்தும். லக்னத்துக்கு 7, 8-ல் இருந்தால் அது நூறு சதவீதம் தோஷமுள்ளது என்றும், சந்திரனுக்கு 7, 8-ல் இருப்பின் 50 சதவீத தோஷமுள்ளது என்றும், சுக்கிரனுக்கு 7, 8-ல் இருப்பது 25 சதவீதம் தோஷம் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆனால், அந்த இடத்துக்கு குரு பார்வை அல்லது குரு சேர்க்கை இருந்தால் அந்த தோஷம் விலகிவிடும். இந்த ஜாதகத்தில் ராகுவுக்கு குரு பார்வை ஏற்பட்டிருப்பதால், தோஷம் விலகிவிட்டது. 7-ம் அதிபதி சனி, 4-ல் உச்சம் பெற்றிருக்கிறார். 7-ம் காரகர் சுக்கிரன், விருச்சிகத்தில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைந்திருக்கிறார். சுக்கிரனுக்கு வலிமை சேர்க்க சுக்கிர ப்ரீதி ஹோமம் மற்றும் மகாலட்சுமி ஹோமம் சூக்த பாராயணத்துடன் செய்வது நல்லது. தற்போது சனி தசை குரு புக்தி 20.4.20 வரை இருப்பதால், மேற்கண்ட பரிகாரங்களைச் செய்வதன் மூலம் திருமணம் விரைவில் நடைபெறும்.