நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை | Raja Yoga star chittirai - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை

ட்டுப்பாட்டுக்கும் காவலுக்கும் உரிய கிரகமான அங்காரகனின் ஆதிக்கத்தில் இருக்கும் நட்சத்திரம் இது. இதில் முதல் இரண்டு பாதங்கள் சௌமிய கிரகமான புதனின் கன்னி ராசியிலும் மூன்று, நான்காம் பாதங்கள் கல்யாண கிரகமான சுக்கிரனின் துலா ராசியிலும் வருகின்றன.

நட்சத்திர மாலை, ‘கண்டதோர் தானம் செய்யும்... ஈன்ற தாய், தந்தை பேணும்...திடமதாய்ப் பேச வல்லன் சித்திரை நாளினானே...’ என்கிறது. அதாவது இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் தைரியசாலியாகவும், தான தர்மம் செய்பவராகவும், பெற்றவர்களைப் பேணுபவராகவும், சொல்வதை அழுத்தந்திருத்தமாகச் சொல்பவராகவும், பொறுமையற்றவராகவும் இருப்பீர்கள் என்று அர்த்தம்.