ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை | Astrological predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

ராசிபலன் - மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை

சுக்கிரனும், புதனும் 11 - ம் வீட்டில் நிற்பதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். வேற்று மதத்தினர், நாட்டினரால் உதவியுண்டு. மகனுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல மணப்பெண் அமைவார். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். ஆனால் சூரியனும், செவ்வாயும் சாதகமாக இல்லாததால் பிள்ளைகளின் தேர்வு, உயர்கல்வி பற்றிய பயம் வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் வெளி உணவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.

குரு 9 - ல் வலுவாக அமர்ந்திருப்பதால் ஓரளவு நன்மை உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். வேற்றுமொழி, மதத்தினர்கள் உதவுவார்கள். உறவினர்கள், நண்பர்களின் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து வாய்ப்பு வரும்.

முற்பகுதியில் போராடினாலும் பிற்பகுதியில் வெற்றி பெறும் நேரம் இது.