தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19 | Thiruvarur Azhi Ther special info - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

திருவாரூர்- சப்த விடங்கத் திருத்தலங்களுள் ஒன்று  (வி+டங்கம்= உளியினால் செதுக்கப்படாதது).  இவ்வூரை, பஞ்சபூதத் தலங்களில் நிலத்துக்கு உரிய தலம் என்றும் ஆன்றோர்கள் சிலர் கூறுவர்.

 சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பே திருவாரூர் கோயில் குறித்து, `அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டார்' என்று அப்பர் பெருமான் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதையே, ‘கோயில் ஐந்து வேலியாம். தீர்த்தக் குளம் ஐந்து வேலியாம். செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலியாம்’ என்பார்கள். திருவாரூர் கோவை என்ற நூலில் ‘குளம் வாவி மதில் ஐவேலியாம். திருவாரூர் தியாகர்’ என்ற குறிப்பு இருக்கிறது.

சிவனாரின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டவை திருவாரூர் நகரமும் ஆலயமும் என்கின்றன புராணங்கள்.

  திருக்கோயிலின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர். சுமார் 25 ஏக்கர் - கமலாலயத் தெப்பக்குளம். செங்கற் தளியாக இருந்த திருவாரூர் ஆலயம், பிறகு சோழப்பேரரசி செம்பியன்மாதேவியால் கற்றளியாக மாற்றி அமைக்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க