ஆலயம் தேடுவோம்: இறையனூர் ஈசனுக்கு ஆலயம் எழுப்புவோம்! | Iraiyanur Sri Mangalyeswarar Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

ஆலயம் தேடுவோம்: இறையனூர் ஈசனுக்கு ஆலயம் எழுப்புவோம்!

ல்லாவற்றையும் நாமே செய்வதில்லை. நம் சுவாசமும், நம்முள் நிகழும் உணவு செரிமானமும்  நம் முயற்சியால் மட்டுமா நடைபெறுகின்றன? நாம் இயங்குவதும் நம்மை இயக்குவதும் இறை அல்லவா?

ஆக, எதன்பொருட்டும் அகங்காரமின்றி, `சகலமும் இறைவன் அருள்' என்று இருப்பவருக்குத் துன்பமே இல்லை. தான் என்ற அகங்காரம் மிகும் போதுதான் துன்பமும் மிகுதியாகிறது. ஒருமுறை, தேவேந்திரனும் அப்படியான பரிதாபநிலைக்கு ஆளானான். அவனது ஆணவத்தை அடக்கி அவனைச் சிவம் ஆட்கொண்ட தலம் இறையனூர்.