ரங்க ராஜ்ஜியம் - 26 | Ranga Rajyam: Spiritual history - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

ரங்க ராஜ்ஜியம் - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘இந்திரன் பிரம னீசனென் றிவர்கள்
எண்ணில் பல்குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
சுற்றமும் சுற்றிநின் றகலாய்
பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும்
பான்மையும் பல்லுயிர்க்கெல்லாம்
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான்
அரங்க மாநகரமர் ந்தானே!’

- பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார்.

நீலன் எனும் அந்தக் குறுநில மன்னன், குமுத வல்லி எனும் அந்தப் பெண்ணிடம் ``உனக்காக நான் திருமால் பக்தனாகிறேன்...” என்றபோதும், “எனக்காக ஆகவேண்டாம் - உங்களுக்காக ஆகிடுங்கள். அதுவே எல்லோருக்கும் நல்லது” என்றே பதிலளித்தாள் அவள்.