மண்... மக்கள்... தெய்வங்கள்! - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து... | Village Gods - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

து ஒரு புற்று. ரயில் பாதையை ஒட்டி, எருக்கஞ்செடிகளும், வேலிக்கருவை முற்களும் அடர்ந்த இடத்திலிருந்தது. பல நூறு கால்கள் அதைக் கடந்து சென்றிருக்கின்றன. சுந்தரி அக்காவுக்கு மட்டும் அந்த வெளி, ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அந்தப் புற்று.

புற்று என்பது பாம்புக்கு உரித்தானதல்ல. அது கரையான் எனப்படும் ஒருவகை எறும்புகளின் இருப்பிடம். மண்ணை தங்கள் ஊனால் குழைத்துக் குழைத்து கரையான்கள் எழுப்புகிற வீடு அது. எப்போதும் மேலே மண் வைத்துப்பூசி பாதுகாப்பாகவே தங்கள் குடிலை அமைத்துக் கொள்கின்றன கரையான்கள். திறந்துகிடக்கிற புற்றுகளில் உள்ளே நுழைந்து பதுங்கிக்கொள்கின்றன பாம்புகள். குளிரும் வெப்பமுமற்ற அந்தப் புற்றின் தட்பவெப்பம் பாம்புகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க