திருவருள் செல்வர்கள்! - 23 - ‘தாயே சகலமும் நீயே!’ | The spiritual story of Sri Neelakanda Dikshitar - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

திருவருள் செல்வர்கள்! - 23 - ‘தாயே சகலமும் நீயே!’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர் - தொடர்ச்சி...

ட்டத்துராணி சிலையின் தொடையில் பின்னம் இருப்பதைக் கண்ட திருமலைநாயக்க மன்னர், அதற்கான காரணத்தைக் கேட்டபோது, சிற்பி சொன்ன பதில் மாமன்னரை ஆவேசம் கொள்ளவைத்ததுடன், பெரும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவர், விடிந்ததும் ``ஸ்ரீதீக்ஷிதர் அவர்களைப் பார்க்கவேண்டும். உடனே போய் அழைத்து வாருங்கள்!” என்று கட்டளையிட்டார்.

அதிகாரி ஒருவர் ஸ்ரீதீக்ஷிதரின் இல்லத்துக்குச் சென்று மன்னரின் கட்டளையை விவரித்தார்.

அம்பிகையின் திருவருளை முழுமையாகப் பெற்றிருந்த ஸ்ரீதீக்ஷிதருக்கு உண்மை புரிந்தது. மன்னர் விபரீத எண்ணத்தால் தன்மீது கோபம் கொண்டிருக்கிறார்; அதை நிறைவேற்றவே அழைப்பு அனுப்பியிருக்கிறார் என்பது விளங்கியது. அதன்பொருட்டு மனம் வருந்தினார்.

‘ஹூம்... அரசர்களின் பேதமை இதுதான் போலும். எனினும், இந்த நிலையில் அரசரைப் பார்ப்பது கூடாது’ என முடிவெடுத்த ஸ்ரீதீக்ஷிதர், அம்பாளிடம் தனது துயரத்தை வெளியிட்டுக் கற்பூர ஆரத்தி செய்தார்.