பொறுமையைவிட கோபம் பெரிது! - பிரகலாதன் மகாபலிக்கு அருளிய உபதேசம்! | Devotional story of Prahaladha- Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

பொறுமையைவிட கோபம் பெரிது! - பிரகலாதன் மகாபலிக்கு அருளிய உபதேசம்!

பி.சந்திரமெளலி

ந்தேகங்கள் பலவிதம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சந்தேகங்கள் எழும். சீடன் ஒருவனுக்கும் சந்தேகம் எழுந்தது. குருநாதரிடம் சென்று தனது சந்தேகத்தைச் சொல்லி தீர்வு வேண்டினான்.

`மேலானது எது பொறுமையா, கோபமா?' இதுதான் அவனுக்கு எழுந்த சந்தேகம். இதே கேள்வி, உத்தம பக்தனான பிரகலாதனின் பேரன் மகாபலிக்கும் எழுந்தது. அதுகுறித்து அவன் தன் தாத்தாவிடம் கேட்க, அதற்கு மகாபலி சொன்ன பதிலைச் சீடனுக்கு  விளக்கினார் குருநாதர்:

சகல தர்மங்களையும் அறிந்த பிரகலாதன், தன் பேரனுக்கு விளக்கம் அளித்தார் ``மகாபலி, கோபம் எப்போதும் உயர்ந்தது அல்ல. அதே நேரம், எல்லா தருணங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதும் கூடாது. சில தருணங்களில் பொறுமையைவிடவும் ரெளத்திரம் சிறப்பானதாகும்.

எவன் ஒருவன், ரௌத்திரம் கொள்ள வேண்டிய தருணங் களிலும் பொறுமையாக இருக் கிறானோ, அவனுக்கு அனைத்து கெடுதல்களும் வந்து சேரும். பகைவர்கள் மட்டுமின்றி, அவனுடைய வேலைக்காரர்களும் அவனை அவமதிப்பர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க