`சிறிய பஞ்சு தானே...' | Motivational Story of Gandhiji - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

`சிறிய பஞ்சு தானே...'

ன் ஆசிரமத்தில் உள்ள சாலையில் நடந்து கொண்டிருந்தார் காந்திஜி. வழியில், இரண்டு அங்குல நீளமுள்ள பஞ்சு ஒன்று சாலையில் கிடப்பதைக் கண்டார். தன்னுடன் வருபவர்களிடம் அதைச் சுட்டிக்காட்டிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் காந்திஜி. உடன் வந்தவர்களில் ஒரு பெண்மணி, அதை எடுத்துக் கொண்டாள்!

மாலையில் தனது ராட்டையை எடுத்து நூல் நூற்க அமர்ந்தவர், சாலையில் இருந்து எடுத்து வந்த பஞ்சுத் துண்டை தரும்படி அந்தப் பெண்ணிடம் கேட்டார்.  அவள் திகைத்தாள். ‘’சிறிய பஞ்சுதானே என்று அதைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டேன் பாபுஜி’’ என்றாள். காந்திஜியின் முகம் மாறிற்று. ‘’இதுவே, ஒரு தம்பிடியாக இருந்திருந்தால், மிகச் சொற்பமான காசுதானே என்று தூக்கி எறிந்திருப்பாயா?’’ என்று கேட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க