குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள் | Story of Veerabhadra - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள்

பூசை. ச.அருணவசந்தன்

ர்வலோகங்களின் நன்மைக்காகச் சிவபெருமான் அநேக அசுரர்களை வென்றடக்கி அருள்புரிந்துள்ளார். அதற்காக அவர் புரிந்த வீரச்செயல்கள், ‘அட்ட வீரட்டம்’ என்று போற்றி வகைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் ஆறில் சிவபெருமான் நேரடியாகவே யமன், அந்தகன், சலந்தரன், திரிபுராதிகள், கஜாசுரன், மன்மதன் ஆகியோரை அழித்தும்  உயிர்ப்பித்தும் அருள்புரிந்தார்.

மற்ற வீரச்செயல்களில் ஈசன் நேரடியாகச் செல்லாமல், தன் அருள்பார்வையில் உண்டான உக்கிர குமாரர்களான வீரபத்திரன், பைரவர் ஆகியோரை அனுப்பி முறையே தட்சன், பிரம்மன் ஆகியோரைத் தண்டித்தார் என்கின்றன புராணங்கள்.