பிருகு முனிவரும் சுவாமிமலையும்! | Devotional story of Maharishi Bhrigu and Swamimalai - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

பிருகு முனிவரும் சுவாமிமலையும்!

சிரகிரி, சிவகிரி, முருகப்பெருமான் குரு அம்சமாக அருள் பாலிப்பதால் குருமலை, குரு கிரி, கோயிலே கட்டுமலை அமைப்புடன் அழகுற காட்சி தருவதால் சுந்தராசலம், நெல்லி (தாத்ரி) மரத்தைத் தல மரமாகப் பெற்றதால் தாத்ரிகிரி ஆகிய சிறப்புப்பெயர்களோடு திகழும் திருத்தலம் சுவாமிமலை.

அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் தந்த தலம் இது. இதையே அவர்,  ‘முதுமறைக்கு ளருமா பொருட்டுள் மொழியே யுரைத்த தகையா தெனக்குனடி காணவைத்த தனியேரகத்தின் முருகோனே! என்று பாடியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க