மன மாற்றத்துக்குப் பரிகாரம் என்ன? | Astrology Question and Answer - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

மன மாற்றத்துக்குப் பரிகாரம் என்ன?

?  விவாகரத்துப் பெற்ற  என்  மகளுக்கு மறுமணம் செய்து வைக்கலாமா?

- ராதா நாயர், பெங்களூரு

! தங்கள் மகளின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தோம். அவர் பிறந்த லக்னம் மகரம். 9-ம் வீடான கன்னியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் உள்ளன. இப்படி, ஒரு ராசியில் நான்கு கிரகங்கள் அமைவது, சந்நியாச யோகத்தைக் குறிப்பிடும்.

அவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 7-ல் சனி அமர்ந்துள்ளார்.   உங்களின் மகள், கணவரின் மூலம் பல சிரமங்களை அனுபவித்ததற்கும் விவாகரத்து பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டதற்கும் இதுவே காரணம். தற்போது, தங்கள் மகளுக்குப் புதன் தசை நடைபெற்று வருகிறது. புதன், `பத்ர யோகம்’ என்ற யோகத்தைத் தரக்கூடிய நிலையிலுள்ளதால், புதன் தசை  - ராகு புக்தி வரும்போது, மறுமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு உண்டாகும்.

அதிகம் படித்தவை