வேண்டினேன்... கிடைத்தது! | Spiritual experience of Readers - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

வேண்டினேன்... கிடைத்தது!

ன்னுடைய 14 வயதிலிருந்து வடபழநி  சாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர் அருள் துணையோடு வளர்ந்தவள் நான். இன்பமோ துன்பமோ எதுவானாலும் அவர்களே கதியெனக் கிடந்தவள் நான். இன்றும் வாரம் இருமுறை அந்த ஆலயத்துக்குச் சென்று வழிபடுவது ஒன்றே எனக்கு நிம்மதி தரும் அனுபவம்.

வேங்கீஸ்வரனே எனக்கு நல்ல கணவரைத் தந்தார்; நல்ல மகள்களைத் தந்தார். என்னுடைய மகள்களுக்கும் நல்ல வாழ்க்கைத் துணையைக் கொடுத்தார். இப்போது அழகான - அறிவான  பேரன், பேத்திகளையும் கொடுத்திருக்கிறார்.

ஒன்றா இரண்டா? வேங்கீஸ்வர பெருமான்  எங்கள் குலத்தையே காவல் காத்த கருணையை என்னவென்று சொல்ல? ஒருமுறை, என் கணவருக்குக் கண்ணில் ஏதோ கோளாறு உண்டாகி பார்வை குறைவு உண்டானது. அப்போதும் ஈசனை வணங்கி விரதமிருந்து, அவரருளால் கணவரின் பார்வையை மீட்டேன். அப்போது அது சவாலான சிகிச்சை என்று கூறி மருத்துவர்களே வியந்தார்கள். பக்கமிருந்து காத்தது என் சிவனல்லவா?! அற்புத பலன் கிடைத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க