நினை அவனை! - புதிய தொடர் | Series about Bhaja Govindam - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

நினை அவனை! - புதிய தொடர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

திசங்கரர் மீது எனக்கு அளவற்ற பிரமிப்பு எழுவதுண்டு. முப்பத்திரண்டு வயதிலேயே முக்தி அடைந்துவிட்டார். அதற்குள் எத்தனை எத்தனை சாதனைகள்! 

பாரதம் முழுவதும் பயணித்து இந்து மதத்தை உயர்த்திப்பிடித்தவர்;  தர்க்க வாதங்களால் வேற்றுமத ஆக்கிரமிப்புகளைத் தடுத்தவர்; புகழ் குன்றா பீடங்களை நிறுவியவர்.  இலக்கியத்துக்கும் அவர் அளித்த பங்கு மகத்தானது. அவர் அருளிய நூல்களில் பஜகோவிந்தம் எனக்கு மிகவும் பிடித்துப்போக முதல் காரணம், எம்.எஸ். அவர்கள். அவரது தேன் குரலில் கரைந்தபிறகுதான்... சம்ஸ்கிருதத்தில் குறைந்த ஞானமே கொண்ட எனக்கு, பஜகோவிந்தத்தின் பாடல்கள் பலவற்றை முழுமையாக உள்வாங்கித் திளைக்க முடிந்தது.

சுவாமி சின்மயானந்தா முதல் கவிஞர் கண்ணதாசன் வரை, பலர் பஜகோவிந்தத்தின் பெருமைகளை மிக அற்புதமாக எழுதியுள்ளார்கள். எனினும், அவற்றையு​ம் மீறி எனக்குள் சில ஐயங்கள். அவற்றுக்கான விடைகளை அறிய முற்பட்டேன். தீர்வுகள் கிடைத்தன. தொடர்ந்து  சித்தர்களின் அணுகுமுறை, ராமகிருஷ்ண பரமஹம்சரின் பேருரைகள், சிவானந்தரின் ‘பேரின்பம்’ ஆகியவையும் இந்தத் தொடர் உருவாகக் காரணமான உந்துசக்திகளாய் அமைந்தன.