ஆதியும் அந்தமும் - புதிய தொடர் | Aathiyum Anthamum series - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

ஆதியும் அந்தமும் - புதிய தொடர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மறை சொல்லும் மகிமைகள்

தியும் அந்தமும். `ஆதி’ என்றால் ஆரம்பம்; `அந்தம்’ என்றால் முடிவு. நாம் நம் வாழ்க்கையில் எத்தனையோ செயல்களைச் செய்கிறோம்; பொருள்களை உருவாக்குகிறோம்; பலருடன் பழகுகிறோம். இவை எல்லாவற்றுக்கும் ஆரம்பமும் உண்டு முடிவும் உண்டு. நாம் படைத்த பொருள்களுக்கு மட்டுமே ஆதியும் அந்தமும் இருக்கும். வேதங்களும் சாஸ்திரங்களும் என்ன சொல்கின்றன தெரியுமா? உலகில் உற்பத்தியாகும் அனைத்துப் பொருள் களும் ஆதியும் அந்தமும் உடையவையே என்கின்றன.

ஒரு விதை... அதுதான் ஆதி. அதை மண்ணில் போடுகிறோம். மழை பொழிவதால் விதை முளைக்கிறது. இருக்கிற பொருள் துளிர்த்தது. அது ஆதி; முளைத்தது என்பது ஒரு மாறுபாடு.  விதை விதைத்தோம்; முளைத்தது. இது பரிணாமம். அத்துடன் நிற்கவில்லை. அது செடியாகி மரமாக வளர்ந்தது. வளர்ந்த பிறகு அரும்பு, மலர், காய் என்று மாற்றம் பெற்று பழமாகிறது. பழுத்த பிறகு அந்தத்தை - ஒரு முடிவைச் சந்திக்கிறது. இப்படியான தொடக்கமும் முடிவும் மனிதன் உட்பட சகல ஜீவராசிகளுக்கும் உண்டு.

ஆம்! உற்பத்தியாகும் பொருள்கள் எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பம் இருப்பதுபோன்று, முடிவும் உண்டு. இதையே ஆதிசங்கரர், `புனரபி ஜனனம்; புனரபி மரணம்’ என்கிறார். பிறந்தவன் இறந்துபோகிறான். இறப்பவன் மீண்டும் பிறப்பான். இப்படியாக பிறவிச் சுழல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

தர்க்க சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமோ? ‘ஷத்பாவ விஹாரா’ என்கிறது. அதாவது, மனிதர் உள்பட எந்த ஒரு ஜீவராசிக்கும் ஆறுவிதமான அவஸ்தைகள் உண்டு என்கிறது.