கேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா? | Spiritual question and answers - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

கேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

? சிவபெருமானை அபிஷேகப் பிரியர் என்கிறார் களே, அவருக்கு அபிஷேக வழிபாடுகள் செய்வது குறித்தும் அதற்கான பலாபலன்கள் குறித்தும் ஞானநூல்கள் என்ன சொல்கின்றன?

-எஸ்.சதா சிவானந்த், கடையநல்லூர்


சிவபெருமான் அபிஷேகப் பிரியர். `அபிஷேக ப்ரிய: சிவ:’ அபிஷேகம் சிவபெருமானுக்கு மிகவும் பிரியம் என்பது ஆகம சாஸ்திரங்களின் கூற்று.

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற் கும் விதிமுறைகள் உள்ளன. நிறைய திரவியங் களைக்கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும்போது, இத்தனை திரவியங்கள், இத்தனை நேரம், இன்னின்ன மந்திரங்கள் என்று வரையறை உள்ளது. 

சிவபெருமானுக்குச் செய்யும் அபிஷேகத்தின் பலனானது சகல ஜீவராசிகளுக்கும் சேரும். அவருக்கு அபிஷேகம் செய்யச் செய்ய தேசம் வளமும் நலமும் பெறும். வேரில் ஊற்றும் தண்ணீர் எப்படி மரம் முழுவதையும் சேர்கிறதோ, அப்படி சிவபெருமானுக்குச் செய்யும் அபிஷேகத்தின் பலன் அனைவருக்கும் சென்று சேர்கிறது. மேலும், நம் கர்மவினைகள் அனைத்தும் தீரும்.

ஒவ்வொரு பலனுக்கும் ஒரு தெய்வ வடிவத்தை வழிபடவேண்டும் என்றும் அந்தத் தெய்வ வடிவம் எப்படி அமையவேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.