அர்த்தநாரி சிவசூரியன்! | Darasuram Airavateswarar Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

அர்த்தநாரி சிவசூரியன்!

கும்பகோணம் நகரத்துக்குத் தென்மேற்கே கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் புறநகராக விளங்குவது தாராசுரம். சோழப் பேரரசர்களின் கோநகரமான பழையாறை என்ற தலைநகரத்தின் ஒரு பகுதியாக ராசராசபுரம் விளங்கியது. இந்த ராசராசபுரம் நாளடைவில் ராராபுரமாக மருவி, பின்பு தாராசுரம் என அழைக்கப்படலாயிற்று.

சோழப் பெருமன்னன் இரண்டாம் ராசராசன் (கி.பி.1146-1163) இந்த ஊரை நிர்மாணம் செய்து, அங்கு ராசராசேச்சரம் என்ற பெயரில் பெரிய சிவாலயம் ஒன்றை எடுப்பித்தான். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணியில் சிறப்பிக்கப் படும் இக்கோயில், பின்னாளில் ஐராவதீஸ்வரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை