ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை | Astrological predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

ங்களின் பூர்வபுண்ணியாதிபதி சூரியன் 10 - ம் வீட்டில் பலம் பெற்றிருப்ப தால், உங்களின் நிர்வாகத்திறன் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புதிய இடத்தில் வேலை அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய முயல்வீர்கள். நண்பர்களிடமிருந்து நல்ல செய்தி வந்து சேரும். 1 -ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் வலுவாக ஆட்சி பெற்றிருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

கடினஉழைப்பால் இலக்கை எட்டுவீர்கள்.