ராகு - கேது - பெயர்ச்சி பலன்கள் | rahu and ketu peyarchi palangal - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)

ராகு - கேது - பெயர்ச்சி பலன்கள்

முற்போக்கு சிந்தனை கொண்ட மேஷ ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்கள் ராசிக்கு ராகு, கேதுவின் சஞ்சாரத்தால் உற்சாகம் பொங்கும். மங்கல காரியங்கள் ஸித்திக்கும். வீடு கட்டும் கனவு நிறைவேறும்; பெண்களின் எண்ணம் பூர்த்தியாகும்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

உங்களைப் பல வழிகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருந்த ராகு, தற்போது 3-ம் இடத்துக்கு வருகிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகளையும், அவருடன் மனஸ்தாபத்தையும் ஏற்படுத்திய நிலை மாறும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சோம்பல், அலட்சியம் ஆகியவை நீங்கி உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.