ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்! | arulmigu shri chokkanathar temple in Panruti - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)

ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!

`லயம் தொழுவது சாலவும் நன்று' என்கிறது அழகுத் தமிழ். ஆனால், போற்றித் தொழுது வழிபடவேண்டிய ஆலயங்கள் பலவும், நம்மை அழவைக்கும் நிலையில் சிதிலமடைந்து கிடப்பது வேதனையான விஷயம்.

`எங்கே ஓர் ஆலயம் பாழ்பட்டுக் கிடக்கிறதோ, அங்கே நாகரீகமான சமுதாயம் வாழவில்லை என்றே பொருள்' என மிகுந்த ஆதங்கத்துடன் சொல்லிவைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். ஆகவே, அன்பர்களே ஆலயம் ஒவ்வொன்றையும் போற்றிப் பாதுகாப்போம்; ஆலயங்களே நம் தேசத்தின் ஆன்மா.

பெரிய புராணம் எண்ணற்ற திருத்தலங்களைச் சிறப்பித்துச் சொல்கிறது. அவற்றில் ஒன்று புத்தூர். வழக்கத்திலுள்ள திருப்பெயர் மணம்தவிழ்ந்த புத்தூர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் அமைந்துள்ளது இந்த ஊர்.