மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’ | Maha Periyava: Spiritual stories - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)

மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியம்: கேஷவ்

காஞ்சி மாமுனிவர் தொடர்பான பக்தர்களின் பரவச அனுபவங்களைத் தொகுத்து ‘மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள்’ என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறார் கார்த்திகேயன் என்ற தீவிர பெரியவா பக்தர். மொத்தம் பத்து பாகங்களாக இவற்றைத் தொகுத்திருக்கிறார். நூல் வடிவாக்கம்: காஷ்யபன்.

மகா பெரியவா கலவையில் முகாமிட்டிருந்த சமயம். தஞ்சைப் பகுதியிலிருந்து தரிசனத்துக்காக வந்திருந்தார் வழக்கறிஞர் ஒருவர். பெரிய தட்டில் பழங்கள், புஷ்பம், கல்கண்டு இத்தியாதிகள். திராட்சை, முந்திரி, தேன் பாட்டிலும் பரவியிருந்தன. காகித உறையில் ரூபாய் நோட்டுகள். சுவாமிகளுக்கு இவற்றைச் சமர்ப்பித்து, வந்தனத்தையும் தெரிவித்துக்கொண்டார் வழக்கறிஞர்.

“அது என்ன கவர்?” என்று சன்னமானக் குரலில் கேட்கிறார் பெரியவா.

“ஏதோ கொஞ்சம் பணம்...” என்கிறார் சட்டம் படித்தவர்.

“கொஞ்சம்னா பத்து ரூபாவா, பதினோரு ரூபாவா?”

“பதினைந்தாயிரம் ரூபாய்...” என்ற வழக்கறிஞரின் குரலில் தன் பெருமையை வெளிப்படுத்தும் தொனி புலப்பட்டது. தான் காரில் வந்திருப்பதையும் தெரிவிக்கிறார் அவர்.