நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்! | Naradhar Ula - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)

நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ந்ததும் வராததுமாக நம் மேஜையின் மீது அல்வாப் பொட்டலத்தை வைத்தபோதே, நாரதர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரிந்து விட்டது.

‘`என்ன நாரதரே, திருநெல்வேலிச் சீமையில் ஏதும் விசேஷமோ?’’ என்று கேட்டோம்.

‘`திருக்கோயில்களில் திருவிழா நடத்தினாலும் சர்ச்சை; நடத்தாவிட்டாலும் சர்ச்சை’’ என்ற நாரதரை இடைமறித்து, ‘`என்ன திருவிழா... என்ன சர்ச்சை... விளக்கமாகச் சொல்லும்'' என்று கேட்டுக் கொண்டோம்.

‘`திருநெல்வேலியில், நெல்லையப்பர் கோயில் தைப்பூச உற்சவம் மிக விசேஷம் என்பதை அறிவீர்தானே? அந்த விழாவை தரிசிக்கவே சென்றிருந்தேன். உற்சவத்தின் 12-ஆம் நாளான ஜனவரி 23-ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற்றது. அதில்தான் சர்ச்சை’’ என்ற நாரதர்,  அதுபற்றி தொடர்ந்து பேசினார்.

‘`கடந்த பல வருடங்களாகவே தெப்பக் குளத்தில் தண்ணீர் போதுமான அளவுக்கு இல்லை. முறைப்படி சரியாகப் பராமரிக்காததால், குளத்துக்குத் தண்ணீர் வரும் பாதைகள் அடைபட்டுவிட்டனவாம். எனவே, திருக்குளத்துக்கு வெளியில் ‘நிலைத் தெப்பம்’தான் கடந்த பல வருடங் களாக நடைபெற்று வருகிறது’’ என்றவரை இடைமறித்துக் கேட்டோம்.

‘`சமீபத்தில்தானே கோயிலுக்குத் திருப் பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகமும் நடந்தது. அப்போதுகூட தெப்பக்குளத்தைச் சீரமைக்க நிர்வாகம் முன்வரவில்லையா?’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க