பி. சந்திர மெளலி
`பதறாத காரியம் சிதறாது’ என்பது முன்னோர் வாக்கு. ஆனால், இன்றைய உலகில் எங்கும் பதற்றம் எதிலும் பதற்றம். கணப்பொழுதில் ஆத்திரத்துக்கு ஆட்படுகின்றனர் பலரும். இதனால் வாழ்க்கையே வீணாகிப் போகும். பொறுமை மற்றும் நிதானத்தை வலியுறுத்தும் திருக்கதை ஒன்றுண்டு. பீஷ்மர் சொன்ன அந்தக் கதையை நாமும் அறிவோமா?