ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை | Astrological predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

ராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை

சூரியனும் புதனும் 13-ம் தேதி முதல் வலுவாக இருப்பதால், அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் மரியாதை கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளும் அளவுக்குப் பணம் வரும்.

13-ம் தேதி முதல், ராகு 3-ம் வீட்டில் நுழைவதால் தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். ஆனால், 9-ம் வீட்டில் நுழையும் கேதுவால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவங்கள் உண்டாகும். ஆனால், 8-ம் வீட்டில் நிற்கும் குருவால் அலைச்சல்களும் செலவினங்களும் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாள்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும்.

நினைத்ததை  நினைத்தபடி முடிக்கும் நேரம் இது.