‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’ | Benefits of Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

? எனக்கு இதுவரை சரியான உத்தியோகம் அமையவில்லை. எனக்கு எப்போது நல்ல உத்தியோகம் அமையும், என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

- ஆர்.எஸ்.சங்கரநாராயணன், சென்னை-44

ஒருவருக்கு நல்ல வேலை அமையவேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் தனம் - செல்வந்த - சம்பத் யோகம் சிறப்பாக அமையவேண்டும். பொதுவாக இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்பதில்லை. முற்காலத்தில் ஒவ்வொருவரும் அவருக்குப் பிடித்தமான தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். அதன் காரணமாகவே, ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்’ என்ற பழமொழியும் ஏற்பட்டிருக்கிறது.