வாழ்வைப் பூரணமாக்கும் பூரம்! | Characteristics of Pooram star - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

வாழ்வைப் பூரணமாக்கும் பூரம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

ந்த நட்சத்திரத்தின் அதிபதி பெண்ணாதிக்கம் உள்ள சுக்கிரன். ‘பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான்’ என்றொரு வாக்கு இருக்கிறது.

நட்சத்திர மாலை, ‘வாணிபஞ் செய்ய வல்லன், விரும்பியே கல்வி கற்கும், வெட்டெனப் பேச வல்லன்...’ என்கிறது. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் ஆற்றல் உள்ளவர்கள்; ஏற்றுமதி இறக்குமதியால் ஆதாயம் பெறுபவர்கள்; கல்வியில் அக்கறையுள்ளவர்கள்; கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லக்கூடியவர்கள் என்கிறது.