ஆலயம் தேடுவோம்: தண்ணீர் துளிர்க்கும்! - அபூர்வ லிங்கம்! | Seethapatti Eswarar Temple in villupuram - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

ஆலயம் தேடுவோம்: தண்ணீர் துளிர்க்கும்! - அபூர்வ லிங்கம்!

‘கண்டனென் கற்பினுக்கணியை’ என்று சிரஞ்சீவி அனுமனால் போற்றப்பட்ட கற்பின் கனலாம் ஜானகிதேவி, அக்னிப் பிரவேசம் முடித்து, அயோத்தி நகர் திரும்பினார். மகாவிஷ்ணுவும் திருமகளும் மனித குலத்தில் பிறந்து, மனித இயல்புகளுக்குத் தங்களை ஒப்புவித்துக் கொண்டு வாழ்ந்தவர்கள். அதன் காரணமாகவே, எல்லோரும் சந்தேகத்துக்கு இடமின்றி வாழவேண்டும் என்பதை உணர்த்த நடந்த அற்புத லீலைதான் அக்னிப் பிரவேசம்.