இப்படிக்கு: தித்தித்தது திருவாதிரை மங்கலம்! | Readers Feedback letters - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

இப்படிக்கு: தித்தித்தது திருவாதிரை மங்கலம்!

`மகத்துவம் அருளும் அகத்தியர் ஆலயங்கள்' கட்டுரை அருமை. குடும்பத்தோடு தரிசிக்க ஆயத்தமாகி விட்டோம்.

- பாலசுப்பிரமணி, திருச்சி

திருவாதிரை மங்கலம் செய்திகள்  தித்திக்கும் தகவல்களோடு எங்களை மகிழ்வித்தது.

- சரண்யா, கும்பகோணம்

வாசகர் அனுபவத்தில் சாயிநாதரின் அருளைப் படித்து மெய்சிலிர்த்தோம்!

- கவிதா, மேட்டூர்

`சக்தி யாத்திரை' கட்டுரை உண்மையில் எங்களை ஏங்க வைத்துவிட்டது. நாங்களும் அடுத்த யாத்திரைக்காகக் காத்திருக்கிறோம்.

- பவானி, சென்னை - 4

ர்வ ஜீவன்களிடத்தும் சதாசிவனை தரிசித்த மகா பெரியவரின் மகிமையும் கருணையும் உன்னதமானவை.

- ஜீவானந்தம், புதுக்கோட்டை

`பாதிரி ஐயா' என பக்தர்கள் வணங்கும் எங்கள் பாகை மேவிய முருகனைப் பற்றிய கட்டுரை, அந்த முருகனை நேரிலேயே தரிசித்த நெகிழ்வைத் தந்தது.

- சிவஞானம், அரக்கோணம்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க