மண்... மக்கள்... தெய்வங்கள்! - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு! | Village Gods - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

படங்கள்: ஆர்.அகிலன்

ம்பிக்கைதான் வழிபாட்டின் ஆணிவேர். நான்கு புறமும் கதவுகள் அடைக்கப்பட்டு,  விளிம்பில் தவிக்கிற ஒருவருக்கு இறுதி நம்பிக்கையாக இருப்பது தெய்வம்தான். தன் உடைமைகள் அபகரிக்கப்பட... ‘அதற்குக் காரணமானவர்களை நீதான் தண்டிக்க வேண்டும்’ என்று காசு வெட்டிப்போட்டு வருகிற ஒருவன், அதன்மூலம் ஆறுதலடைகிறான்.

‘என் நோயை  நீதான் தீர்க்க வேண்டும்’ என்று உப்பு வாங்கிக் கொட்டுகிற ஒருவன், அதன்பின்  உளவியலாக அந்த நோயின் உள்மனத் தாக்கத்திலிருந்து வெளியே வந்து நம்பிக்கையைப் பற்றிக்கொள்கிறான். பூசாரிகள் ஆவேசமடைந்து அள்ளி வீசுகிற திருநீறும், தெய்வத்தின் பாதத்திலிருந்து எடுத்துத் தரப்படுகிற ஒரு வாழைப்பழமும் மருந்தாவது, நம்பிக்கையின் பலனால்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க